முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு

புதன்கிழமை, 24 ஜூலை 2024      உலகம்
Ethiopia 2024 07 24

அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அங்கு மண்ணில் புதையுண்டன. அப்போது மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சியில் அவர்களது உறவினர் இறங்கினர். 

ஆனால் அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வரை 157 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளளது. 

இதில் சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மண்ணில் புதையுண்டவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து