முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸ் ஒலிம்பிக் - 2024 மனு பாகருக்கு பாராட்டு

திங்கட்கிழமை, 29 ஜூலை 2024      விளையாட்டு
Manu-bhaker-shooter

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மனு பாகர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார். அவரது வெற்றி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.” என்று பாராட்டு தெரிவித்தார். சபாநாயகர் அவ்வாறு கூறியதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி கரவொலி எழுப்பினர். தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, “இந்திய வீரர்களின் செயல்பாடு நாட்டுக்கான மரியாதையை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

துப்பாக்கி சுடுதலில் தங்கம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளார் சீன வீரர் ஷேங் லிஹோ. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீன வீரர் ஷேங் லிஹோ தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹுவாங் யூடிங்குடன் இணைந்து ஷேங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது, ஆடவர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம், ஷேங் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆடவர் பிரிவில் ஷேங் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஸ்வீடனின் விக்டர் லிண்ட்கிரன் வெள்ளிப் பதக்கமும், குரோஷியாவின் மிரான் மரிசிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பதக்கப் பட்டியலில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

பதக்கத்தை தவறவிட்ட அர்ஜூன் 

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை தவறவிட்டார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் நேற்று வெண்கலம் வென்றிருந்த நிலையில், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நுழைந்த அர்ஜூன் பதக்கத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு 0.9 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பு பறிபோனது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இறுதிச்சுற்றில் நேற்று (ஜூலை 29) விளையாடினார்.

நான்காவது சுற்றில் நூழிலையில் தவறியதால் 208.4 புள்ளிகளை அவர் பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த மிரான் மரிசிச் 209.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இப்பிரிவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விக்டர் லின்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த லிஹாஹோ ஷேங் 252.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தால் பெண்கள் பிரிவின் ஆட்டத்தை நிறைவு செய்தார். அவர் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் பங்குபெறும் ஆட்டம் நேற்று (ஜூலை 30) நடைபெறவுள்ளது.

கராக்கியை வீழ்த்திய லக்ஷயா சென்

இந்தியாவின் லக்‌ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார். 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட லக்ஷயா சென் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஜூலியன் கராக்கியை வீழ்த்தினார்.

ஹாக்கி: டிரா செய்த இந்திய அணி 

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என சமனில் நீடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லூகாஸ் ஆர்டினெஸ் (22வது நிமிடம்) கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து 2வது பாதி ஆட்டம் முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என அர்ஜென்டினா தொடர்ந்து முன்னிலை வகித்தது. இதையடுத்து 4வது பாதி (கடைசி பாதி) ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர். இறுதியில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (59வது நிமிடம்) ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து