முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி ஜெர்சிக்கு முக்கியத்துவம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

டெஸ்ட் போட்டி குறித்து சேவாக்

டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக், தில்லி பிரீமியர் லீக்கின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தில்லி பிரீமியர் லீக் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டி20 போட்டிகளை நோக்கி இளைஞர்கள் கவரப்படுவதை நாம் குறைகூற முடியாது. டி20 போட்டிகள் அவர்களுக்கு பொருளாதார பயன்களை அளிக்கிறது. தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஓவருக்கு 5 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ரன்கள் குவிக்கின்றனர். நாங்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும்போது, ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 4 ரன்கள் எடுப்பார்கள்.

அதிரடியாக விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் உங்களது அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். டெஸ்ட் போட்டியில் 270 பந்துகளில் 300 ரன்கள் குவித்தேன். இன்றைய இளைஞர்கள் அதே 270 பந்துகளில் 400 ரன்கள் குவிக்கக் கூட வாய்ப்புள்ளது. டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து