முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடக்கிறது : தி.மு.க. வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Kovai 2024 08 05

Source: provided

கோவை : கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் இன்று (ஆக. 6) நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் யார் என கவுன்சிலர்களிடம் கேள்வி எழுந்தது. மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பலரது பெயர் கூறப்பட்டன. 

100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 இடங்களை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வென்றுள்ளனர். எனவே மேயராக அறிவிக்கப்படுபவர் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருந்தன. 

இதற்கிடையே கவுன்சிலர்களில் இருந்து ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய, தி.மு.க. கவுன்சிலர்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதன் இறுதியில் 29-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்றால் இவர் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்படுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து