முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க.வின் கொடிப்பாடல் உணர்த்தும் பொருள் என்ன?

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2024      தமிழகம்
vijay-flag-2024-08-22

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஆக.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழுக்க 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் தொடக்கத்தில் யானைகள் மீது அமர்ந்தபடி சிலர் மக்களை துன்புறுத்துகின்றனர். கையில் காப்புடன் குதிரையில் வரும் விஜய் போன்ற ஒருவர், தனது இரு யானைகளின் மூலம் அந்த கொடுங்கோலர்களை வீழ்த்துகிறார். இப்படியாக பாடல் தொடங்குகிறது.

தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது என்ற வரிகள் வருகின்றன. இது எம்ஜிஆரை குறிப்பதாக தெரிகிறது. “சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகளின் மூலம் சினிமாவில் கோடிகள் கொட்டும் வருமானத்தை விட்டு அரசியலுக்கு வருவதை குறிப்பிட்டுள்ளார் விஜய்.

பாடலின் நடுவே தவெக கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவர் ஏந்தி நிற்பதைப் போல ஒரு இடம் வருகிறது. இதன் மூலம் மதநல்லிணக்கமே தனது பாதை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த பாடலின் மூலம் தெரிவித்துள்ளார் விஜய். “அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” உள்ளிட்ட வரிகள் கவனிக்க வைக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து