முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி: இந்தியா முதல் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சீன எல்லைக்குட்பட்ட மங்கோலியாவின் ஹலன்பீர் சிட்டியில் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் சீன அணியுடனான தொடக்க ஆட்டத்தில், இந்திய அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ஆடவர் அணியில் சுக்ஜீத், உத்தாம், அபிஷேக் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

_____________________________________________________________________________

சாதனையை சமன் செய்த ஜூரல்

துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் கடந்த 5-ம் தேதி பெங்களூருவில் தொடங்கிய போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி முதல் இன்னிங்சில் 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக இந்த போட்டியின் இந்தியா பி அணியின் 2-வது இன்னிங்சின்போது இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 7 கேட்சுகளை பிடித்தார். இதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ். தோனியின் வாழ்நாள் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2004 - 05 துலீப் கோப்பையில் மத்திய மண்டல அணிக்கு எதிரான போட்டியில் வடக்கு மண்டல அணிக்காக எம்.எஸ். தோனியும் ஒரு இன்னிங்ஸில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்திருந்தார்.

_____________________________________________________________________________

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மொயீன் அலி (வயது 37). இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 67 ஐ.பி.எல் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட்களிலும் கலந்து கொண்டு ஆடி வருகிறார். இவர் 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்பட்ட மொயீன் அலிக்கு எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஓய்வு குறித்து சமீபத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் உடன் ஒரு பேட்டியில் மொயீன் அலி கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம். மீண்டும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட முயற்சி செய்யலாம், ஆனால் நான் உண்மையில் விளையாட மாட்டேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஓய்வு முடிவை அறிவித்தாலும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து