முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

சீனாவை வீழ்த்தியது...

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

அடுத்தடுத்து கோல்கள்...

இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானுடன் நேற்று மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங் 2 கோல்களும், அபிஷேக், சஞ்சய் மற்றும் உத்தம் சிங் தலா 1 கோலும் அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து