முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: சீமான் அஞ்சலி

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
Seeman 2023 01 22

சென்னை, இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது., ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்ட போராளி..! லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த புரட்சியாளர்..!

அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தையும், தன்மானத்தையும் இழப்பதற்குக் காரணமான மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்; அதிக கலால் வரிக்கு ஆசைப்பட்டு அரசு அதனை அனுமதிப்பதால் உழைக்கும் மக்களின் பணம் உறிஞ்சப்படுகிறது. குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929 அன்றே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய பெருந்தகை..!

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..! அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவியபோது நாம் இந்துக்களே இல்லை எனும்போது, பின் எதற்காக மதம் மாற வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி தம் அறிவாற்றல் மூலம் வரலாற்றுத் தெளிவினை ஊட்டிய வழிகாட்டி..!

அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..! நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவைப்போற்றும் இந்நாளில் அவர் கற்பித்த மொழியையும், காட்டிய வழியையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைக் காக்கவும் உறுதியேற்போம்! சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து