எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில்,
லட்டு மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்தது. கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்கும் பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நெய்யில் காய்கறி கொழுப்பும், விலங்கு கொழுப்பும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. விலங்கு கொழுப்பு (பன்றி கொழுப்பு), பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் திராட்சை விதை, ஆளிவிதை உட்பட மீன் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சோதனைக்கு உட்பட்ட நெய் மாதிரியில் இதெல்லாம் ஒரு கலவையாக இருந்ததிருக்கிறது. தூய பால் கொழுப்பின் அளவு 95.68 முதல் 104.32 வரை இருக்க வேண்டும். ஆனால், எங்களின் அனைத்து நெய் மாதிரிகளிலும் சுமார் 20 அளவே இருக்கின்றன.
அதாவது வழங்கப்படும் நெய்யில் அதிக கலப்படம் உள்ளது. கலப்படம் செய்தவர்களை தடைப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை நாங்கள் தொடங்கி உள்ளோம். சப்ளையர் மீது அபராதம் விதித்துள்ளோம். நெய் சப்ளைகளை மேம்படுத்தவும், எங்கள் உள் அமைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்.
எங்கள் சொந்த ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் தீர்க்கப்படும்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக நான் பொறுப்பேற்றதும், வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பிரசாதமாக வழங்கப்படும் நெய் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படும் லட்டுவின் தரம் குறித்து முதல்வர் கவலை தெரிவித்தார்.
தரத்தில் பாதிப்பு உண்டாக்குவது புனிதமற்ற தன்மையை செய்வது போன்று. தூய்மையான பசும்பால் நெய் கிடைப்பது உள்ளிட்ட இந்த கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வேலைகளை ஆரம்பித்தோம்.
நெய்யில் கலப்படத்தை சோதிக்க எங்களிடம் ஆய்வுக்கூடம் இல்லை என்பது தெரிய வந்தது. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த சிஸ்டமும் இல்லை. நெய் செய்ய டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிடும் விலை சாத்தியமற்றதாக உள்ளது.
சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு குறைவாக இருந்தது. அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம். சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
அனைத்து மாதிரிகளையும் சேகரித்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அவை அளித்த அறிக்கைகள் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தன என்று நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2024.
03 Oct 2024 -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்: நாகேந்திரன், சம்போ செந்தில் ஏ-1, ஏ-2 குற்றவாளி
03 Oct 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
போதைப்பொருள் விற்பவர்கள் குறியாக மாறிய குடியிருப்புகள் : தி.மு.க. அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
03 Oct 2024சென்னை, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை புதிய உச்சம்
03 Oct 2024சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து நேற்று ரூ.56,880-க்கு விற்பனையானது.
-
இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைத்த வங்கதேசம்
03 Oct 2024டாக்கா, வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவ
-
52 மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு
03 Oct 2024சென்னை, தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2018-ல் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம
-
திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2024திருவெறும்பூர், திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை
03 Oct 2024சென்னை, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
-
மத்திய கிழக்குபகுதி நிலவரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை
03 Oct 2024டெல் அவிவ், இஸ்ரேல் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
இன்று த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா: காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பு
03 Oct 2024சென்னை, த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்: இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் அச்சம்
03 Oct 2024டெல் அவிவ், ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Oct 2024சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காப்புக்கட்டுதலுடன் பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
03 Oct 2024பழனி, அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
-
லெபனான் மீது தாக்குதல் தொடரும் இஸ்ரேல் எச்சரிக்கை
03 Oct 2024பெய்ரூட், லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பைடனின் மோசமான நிர்வாகத்தால் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டிரம்ப்
03 Oct 2024வாஷிங்டன: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
-
‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு
03 Oct 2024மதுரை, என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற ம
-
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கியது சென்னை கோர்ட்
03 Oct 2024சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
-
காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு
03 Oct 2024புதுடெல்லி, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
அ.தி.மு.க. ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி முன்னாள் அமைச்சர் பெருமிதம்
03 Oct 2024செங்கல்பட்டு, ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்
-
நடிகை சமந்தா குறித்த சர்ச்சை கருத்து திரும்பப்பெற்றார் தெலங்கானா அமைச்சர்
03 Oct 2024ஐதராபாத்: திரை நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவி
-
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீராமானம்
03 Oct 2024வண்டலூர்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் நேற்று (அக்.3) நடைபெற்றது.
-
கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை வழக்குகள் அனைத்தும் மாற்றி உத்தரவு
03 Oct 2024புதுடெல்லி: கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
-
ஈரானில் விஷ சாராயம் குடித்த 26 பேர் பலி
03 Oct 2024டெஹ்ரான்: ஈரானில் விஷ சாராயம் குடித்து 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.