Idhayam Matrimony

35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      உலகம்
Sri-Lanka 2024-03-25

Source: provided

கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றை காண ஏராளமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு பயணிக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது. 

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மேலும்  6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து