முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்டோசர் விவகாரத்தில் விரைவில் அனைவருக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் வெளியீடு : தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : புல்டோசர்களைக் கொண்டு சொத்துகளை இடிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வகுத்தளிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும். அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்’ என்று இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை பாஜக ஆளும் மாநில அரசுகள் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, "ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டால்கூட அது அரசியலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் அங்கீகாரம் இல்லாத கட்டமைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தது.

இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறியதை அடுத்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், செப்டம்பர் 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட சொத்துகளை அக்டோபர் 1 வரை அனுமதி இன்றி இடிக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் அமர்வின் இடைக்கால உத்தரவை நீட்டிக்க வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து