எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் நடந்த த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சொத்து வரி, மின்கட்டண உயர்வுக்காகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ம் தேதி நடந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை பனையூரில் த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும், கட்சியின் கொள்கைகளையும் உறுதியாக பின்பற்றுவோம். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டை வெற்றி பெற வைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி. கட்சியின் கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்பதை விளக்க வேண்டியது நமது கடமை
ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். லோக்சபா தத்துவத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பா.ஜ.க. அரசின் சட்டத்திற்கு கண்டனம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கச் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று தி.மு.க., அரசு கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பித்து கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்.
மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் நீட் தேர்வை மாநில அரசே நீக்கி தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்ற இயலும். சென்னையை பாதுகாக்கவும், விவசாயிகளின் மன நிலையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஓரு கொள்கையாகவே முன்னெடுப்போம். என்.எல்.சி.,யில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தக்கூடாது.
சென்னையை போன்று கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசை ஆலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கை தூதர் ஆக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். இலங்கை தமிழருக்கான நிரந்தர தீர்வைக் கொண்டு வர பொது வாக்கெடுப்பை மத்திய மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. தீவு கூட்டங்களை கொண்ட கடற்பகுதியை கொண்டநாடுகள் தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஐ.நா., வழிகாட்டி உள்ளது.கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யக்கூடாது எனக்கூறியுள்ளது. இதனை இலங்கை அரசு கடைபிடிக்கவில்லை. மத்திய அரசும் வலியுறுத்தவில்லை. மாநில அரசு கேள்வி எழுப்பவில்லை. இந்த சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி மீனவர்களுடன் இணைந்து த.வெ.க., போராடும்
அரசின் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்வு போன்று மக்கள் மீது மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்த தி.மு.க., அரசுக்கு கண்டனம், தமிழகத்தில் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் புழக்கம் போன்ற நிர்வாக சீர்கேடுகளைச் சரி செய்யாமல் மக்கள் நலனைக் காட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் தி.மு.க., அரசுக்கு கண்டனம்.
தேர்தல் வாக்குறுதியை வழக்கம் போல் பறக்கவிட்டுள்ள தி.மு.க., மின் கட்டண உயர்வை திணித்துள்ளது. இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செய்யும் முறையை கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விட கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற அமர்வில் தமிழை தாய்மொழியாக கொண்ட நீதிபதி ஒருவர் இருக்கவேண்டும்.
தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் சென்னையில் பிரமாண்டமான அருங்காட்சியகம் கட்ட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படும் பஸ் ஸ்டாண்டுகள், பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு தமிழ் மண்ணில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்டத் தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும். ஆண்டுதோறும் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பண முடிப்பும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்புத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்று அபாயம் வளைவிக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
நீட் தேர்வால் மாணவ - மாணவியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது ' வழங்கும் தமிழக அரசுக்கு வரவேற்பு தெரிவிப்பது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதுடன், வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதற்கு வரவேற்பு, த.வெ.க., மாநாட்டிற்கு வரும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது ஆகிய 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
சுமார் 400 இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ந்து 4-வது நாளாக ரத்து: பயணிகள் கடும் அவதி
05 Dec 2025மும்பை, இண்டிகோ விமானம் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
மாமதுரைக்கு தேவை வளர்ச்சியா, அரசியலா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
05 Dec 2025சென்னை, மதுரைக்கு தேவை வளர்ச்சியா, அரசியலா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் இணைந்தது ஏன்...? - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
05 Dec 2025சென்னை : விஜய் கட்சியில் இணைந்தது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
-
குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
05 Dec 2025தென்காசி : குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுககு திடீர் தடை விதிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
05 Dec 2025சென்னை, தமிழ முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை : பிரதமர் மோடி வலியுறுத்தல்
05 Dec 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கம்
05 Dec 2025ஊட்டி, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு
05 Dec 2025டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
05 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
05 Dec 2025புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார்.
-
தீபத்திருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
05 Dec 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
-
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான இலவச இ-விசா வழங்கும் திட்டம் : புடின் முன்னிலையில் மோடி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.
-
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சி.எஸ்.கே. 2 வீரர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு: அஸ்வின் கணிப்பு
05 Dec 2025சென்னை : ஐ.பி.எல். மினி ஏலத்தில் உமேஷ் யாதவ் - ஆகியுப் நபியை சி.எஸ்.கே. தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக அஸ்வின் கணித்துள்ளார்.
-
பிரதமர் மோடி- அதிபர் புடின் முன்னிலையில் சுகாதாரம், பாதுகாப்பு உள்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
05 Dec 2025புதுடெல்லி : டெல்லியில் ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றார் ஷபாலி
05 Dec 2025துபாய் : ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருது பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா இடம்பெற்றார்.
-
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது : உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
05 Dec 2025புதுடெல்லி : உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்
-
நியூசி., எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றிக்கு 319 ரன்கள் தேவை
05 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இன்னும் 319 ரன்கள் தேவைப்படுகின்றன.
-
மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம்: கனிமொழி
05 Dec 2025புதுடெல்லி : மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
05 Dec 2025பெங்களூரு : பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
05 Dec 2025திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.


