எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு 'தமிழ் ஒளி' என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது வரும் காலத்தில் தெரிய வரும் என விஜய் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025