முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
CM-2 2024-11-08

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு  வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக பல்வேறு துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான தேர்விற்கு 13.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியானவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 96 பேரும், பொதுப்பணித் துறையில் 42 பேரும்,  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 52 பேரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 18 பேரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 38 பேரும் என மொத்தம் 246 நபர்கள் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேருக்கு முதல்வர் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். 

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் கே.என். நேரு,  பொன்முடி,  எ.வ.வேலு,  செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர்  முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து