முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித்தின் சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

டர்பன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார்.

டி20 போட்டி... 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

10 சிக்சர்கள்...

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வெறும் 17.5 ஓவர்களிலேயே 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முன்னதாக இந்த போட்டியில் 10 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சாம்சன் சமன் செய்துள்ளார்.

சமன் செய்தார்....

இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சாம்சன் சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் 10 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை சாம்சன் சமன் செய்துள்ளார். 

ஆட்ட நாயகன் விருது

இந்தியாவின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சஞ்சு சாம்சன் பேசுகையில், உண்மையிலேயே நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளில் முடிந்த அளவுக்கு ரண்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் எனக்கு சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. தென் ஆப்பிரிக்க அணி தங்களுக்கு சாதகமான சொந்த மண்ணில் விளையாடுவதால் பலமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் அவர்களை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து