முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புடன் மெட்டா நிறுவன சி.இ.ஓ. ஜூகர்பெர்க் சந்திப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      உலகம்
Trump-Zuckerberg--2024-11-2

புளோரிடா, அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப்பை மெட்டா நிறுவன சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் புளோரிடாவில் சந்தித்துள்ளார். இருவரும் மார்-எ-லாகோ கிளப்பில் சந்தித்துள்ளனர்.

இது குறித்து டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள ஸ்டீபன் மில்லர் தெரிவித்தாவது, 

அனைத்து தொழில் நிறுவன தலைவர்களும் டிரம்ப்பின் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே மார்க் ஜூகர்பெர்கும் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதில் அவர் உறுதியாக உள்ளார். அது அவரது ஆர்வமாக உள்ளது என்றார்.

புதிதாக அமையவுள்ள அரசு நிர்வாகம் குறித்து டிரம்ப் உடன் கலந்து பேச கடந்த புதன்கிழமை அன்று இரவு உணவில் பங்கேற்க மார்க் ஜூகர்பெர்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அவர் அதில் பங்கேற்றார். அப்போது டிரம்ப் குழுவினரும் இருந்தனர் என்பதை மெட்டா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் வெடித்த வன்முறையை தொடர்ந்து டிரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. கடந்த 2023 அவரது கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

2024 அதிபர் தேர்தலில் மார்க் ஜூகர்பெர்க், எந்தவொரு அதிபர் வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் டிரம்ப் மீது நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு அவரது மீட்சி குறித்து மார்க் ஜூகர்பெர்க் கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பைடன் அரசு நிர்வாகம் கொரோனா குறித்த கன்டென்ட்களை சென்சார் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அதே நேரத்தில் மார்க் ஜூகர்பெர்கை டிரம்ப் வெளிப்படையாக சாடி வந்தார். கடந்த ஜூலையில், தேர்தல் மோசடியில் பகுதி அளவில் பங்கு கொண்டிருப்பவர்களும் சிறைக்கு செல்ல நேரிடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து