Idhayam Matrimony

பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026      இந்தியா
PSLV-2026-01-12

ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.

மூன்றாவது நிலையில் ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோள் உள்பட 16 இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டில் ஏவப்பட்டது.

முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. அதேபோல், ஸ்பெயின் ஸ்டாா்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது. அதைப் பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது நிலையில் ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:- ”பி.எஸ்.எல்.வி. சி62 / இஓஎஸ் - என்1 திட்டத்தை செயல்படுத்த (நேற்று) முயற்சித்துள்ளோம். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இரண்டு திட எரிபொருள் நிலைகள் மற்றும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட நான்கு நிலை ராக்கெட் ஆகும்.

மூன்றாவது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்தது. மூன்றாவது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளைக் கண்டோம். இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து