முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026      தமிழகம்
Selvabaru 2023-02-19

சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,  ராகுல்காந்தி சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்ற தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி ஆட்சி குறித்து ஐ.பெரியசாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது;

எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நாங்கள் எங்களது கருத்தை சொல்லி இருக்கிறோம். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,  ராகுல்காந்தி சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.” என்றார்.

அப்போது ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது?’ என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர் இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, ‘தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்’ என்று கூறியுள்ளார். செல்வப்பெருந்தகையின் இன்றைய பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து