முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-12

சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு., சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா நேற்று முன்தினம் (ஜன. 11) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன. 12) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தூய்மைப் பணியாளர் பத்வாவின் நேர்மையை பாராட்டி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து