முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Arabic 2024-11-29

Source: provided

 

புது டெல்லி: அரபிக்கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் இரண்டு படகுகளில் போதைப் பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். அந்த படகுகளை சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடம் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

படகில் இருந்த நபர்களை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இரண்டு படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து