முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
eps 2025-01-17

Source: provided

சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு  எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்  என பலரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. கட்சி கொடியை ஏற்றி வைத்து 108 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து