முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள வருணன்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      சினிமா
Varunan 2025-03-11

Source: provided

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் 'வருணன்'. இதில் நாயகனாக நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த், நாயகியாக கேப்ரியல்லா ஆகியோர் நடித்துள்ளனர். யாக்கை பிலிம்ஸ் வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் படம் பற்றி இயக்குனர் ஜெயவேல், ''இது தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். 

தண்ணீரை வியாபாரம் ஆக்கி காசு பார்ப்பவர்கள் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி உள்ளோம் என்றார். இதில் வருண பகவானாக சத்யராஜ் குரல் கொடுத்து இருக்கிறார். கதையை படித்ததும் உடனே குரல் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். தண்ணீர் சேமிப்பின் அவசியத்தையும் படம் உணர்த்தும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து