முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் தொடங்குமா சென்னை அணி..? - இன்று மும்பையை எதிர்கொள்கிறது

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      விளையாட்டு
CSK 2-2025-03-22

Source: provided

சென்னை : நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்ற சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

10 அணிகள்...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

தீவிர பயிற்சி...

இதில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது. இதனையொட்டி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். 

ஒரு போட்டி தடை...

இந்த சூழலில் ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதாக ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது.  இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். 

சூர்யகுமார் கேப்டன்...

இந்த சூழலில் தமக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ஜெவர்த்தனே ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா, "நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். ஏனென்றால் எங்கள் அணியில் மூன்று கேப்டன்கள் என்னுடன் விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் எனக்கு துணை நிற்பார்கள். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அவர்கள் நிச்சயம் எனக்கு அறிவுரைகளை வழங்குவார்கள் என்று கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து