முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      உலகம்
Phone

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், டெல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஆதரிக்கவும், விலை உயர்வு குறித்து அமெரிக்க நுகர்வோரின் அச்சத்தைப் போக்கவும் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன், ஹார்டு-டிரைவ்கள், செமி கண்டெக்டர்கள், சிப் தயாரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை இது தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் (ஏப். 12) வெளியிட்டது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, நுகர்வோர் மின்னணு சாதங்களின் உலகளாவிய உற்பத்தியில் சீனா 70%-க்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் வரி விலக்கு சலுகை தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் உள்நாட்டை வாக்காளர்களைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாக கொண்டிருந்தாலும், பெய்ஜிங் உடனான கட்டண மோதலில் இது பின்னடைவாகக் கருதப்படுகிறது. பெரும்பலான மின்னணு சாதனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை, இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளதால் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து