முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருப்பதி : தொடர் விடுமுறையால் திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் அலைமோதி வருகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலை வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி எம்.பி.சி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால்,காபி உள்ளிட்டவை வழங்கினர். ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில் வரை சில பக்தர்கள் செருப்பு அணிந்து வந்தனர். இதனை தடுக்க தவறிய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்தது.

மேலும் திருப்பதி மலையில் குறிப்பிட்ட சில இடங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் ஏழுமலையான் கோவில் பாரம்பரியத்தை காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  திருப்பதியில் நேற்று  முன்தினம் 72,923 பேர் தரிசனம் செய்தனர். 35,571 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து