முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Meenakshi amman temple

Source: provided

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா ஏப்.28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான ஏப்.29-ம் தேதி (சித்திரை 16)செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்குமேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

மே 7ம் தேதி (சித்திரை 24) புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். மே 8ம் தேதி (சித்திரை 25) வியாழக்கிழமை காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 9ம் தேதி (சித்திரை 26) வெள்ளிக்கிழமை காலை 5.05 மணிக்குமேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பின்னர், காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். மே 10 சனிக்கிழமையன்று தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள் செல்லையா, சுப்புலெட்சுமி, மு.சீனிவாசன், எஸ்.மீனா மற்றும் உதவி ஆணையர் லோகநாதன் ஆகியார் செய்து வருகின்றனர். சித்திரைத் திங்கள் 15-ம் நாள் ஏப்.28-ம் தேதி திங்கள்கிழமை நிலத்தேவர் வழிபாடு (வாஸ்து சாந்தி) நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து