Idhayam Matrimony

அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      இந்தியா
Robert-Vadra 2024-04-15

Source: provided

புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக ஆஜராவதற்கு டெல்லியுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்று (ஏப்.15) சென்றார். வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “நான் மக்களுக்காக பேசும் போது எல்லாம் அவர்கள் என்னை ஒடுக்கப்பார்க்கிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர்கள் விசாரணை அமைப்புகளின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். என்னிடம் மறைப்பற்கு எதுவும் இல்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை. விசாரணைக்கு எப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம். இந்த வழக்குக்கு ஒரு முடிவு வரும் என்று நான் நம்புகிறேன்.

மக்கள் என்னை நேசிக்கிறார்கள், நான் அரசியலுக்கு வருதை விரும்புகிறார்கள். நான் அரசியலில் இணையும் எனது விருப்பத்தைத் தெரிவித்ததும், அவர்கள் பழைய வழக்குகளை மீண்டும் கொண்டு வந்து என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் போகும் போதெல்லாம் தடுத்து நிறுத்தப்படுகிறேன். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார். பாஜக இதனைச் செய்கிறது. உண்மையான பிரச்சினையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். ஒன்றுமே இல்லாத வழக்கு இது. இதுதொடர்பாக கடந்த 20 ஆண்டுகளில் 15 முறை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து