முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK 11-04-2025

Source: provided

சென்னை : சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு மாற்றாக  குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீசை ஒப்பந்தம் செய்துள்ளது.

விறுவிறுப்பாக...

ஐ.பி.எல். தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தோனி கேப்டனாக... 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

குட்டி ஏபி டிவில்லியர்ஸ்... 

இந்நிலையில் சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சி.எஸ்.கே. ஒப்பந்தம் செய்துள்ளது. 21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து