Idhayam Matrimony

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Tangam 2025-03-14

Source: provided

சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், “மதுராந்தகம் சார்நிலைக் கருவூலத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “புதிய கட்டிடம் கட்ட வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையிடம் விரிவான திட்ட அறிக்கை பெற்றபின் மதுராந்தகம் சார்நிலைக் கருவூலம் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.” என்றார்.

தொடர்ந்து, மகரதம் குமரவேல், “லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து அமைச்சர்களாக அமர வைத்துள்ளனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி, அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு சார்பில் ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவுக்கு கால வரையறை தரப்பட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்களுடன் தங்கள் கருத்துகளை தந்துள்ளன. அதை பரிசீலித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு எடுக்கும்.” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து