முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நான் முதல்வன் திட்ட பயனாளிகள் அதிகளவில் வெற்றி : துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

சென்னை : தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:   மத்திய அரசுப்பணிகளைப் பொறுத்தவரை, 2016-ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். ஆனால், 2016-க்கு பிறகு அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசினுடைய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற அந்த ஒரே நோக்கத்தோடு நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவை கடந்த 2023-ம் ஆண்டு நாம் துவங்கினோம்.  இதன்மூலம் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் 10 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாயும், மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 2023-2024 ஆம் ஆண்டிலேயே, 47 தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றார்கள்.  அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் என்பதை இங்கே நான் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், ‘நான் முதல்வன்’ திட்டம் இதே உறுதியோடு செயல்படும் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து