முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

விசாரணை நிறைவில், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் இடத்தை நிரப்ப தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து இருந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.  2 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது. மேலும் 3 பல்கலைக்கழகளுக்கான துணை வேந்தர் தேடுதல் குழுவை மீண்டும் செயல்பட உத்தவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுல் குழு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

தமிழ்நாடு அரசு நியமித்துள்ள தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்கலை. பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் துணை வேந்தர்களை நியமித்து பல்கலை. செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து அதிகாரிகளும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து