முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
sun-2023-05-01

சென்னை, அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையடுத்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும். அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.

கத்திரி வெயிலின்போது வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். கோடை காலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது.

கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது.

இதற்கிடையை தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.  வெப்பநிலை அதிகருத்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ இயக்குநரகம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு விரிவான வழிகாட்டு ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

அதன்படி, மக்கள் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சூரியன் உச்சத்தில் இருக்கும் ​​மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். அவசியம் வெளியில் செல்ல நேரிடும்போது, பாதுகாப்புக்காக குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதையும், வெய்யில் உச்சமடையும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

வெய்யிலில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வது கூடாது, ஏனெனில் வெய்யிலில் நிறுத்தப்படும் வாகனத்தின் உள்புற வெப்பநிலை ஆபத்தான முறையில் உயரக்கூடும். உடலில் நீர்ச்சத்து குறைவதற்குக் காரணமாக காபி, டீ மற்றும் மதுபானங்களை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் இருந்தாலும் உடல் வெப்பம் அதிகரிப்பதைக் தடுக்க, மதிய நேரங்களில் சமைப்பதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூடான தரையில் வெறுங்காலுடன் நடப்பதையும், அதிக புரதம் அல்லது காலாவதியான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான எலுமிச்சை தண்ணீர், மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து குடிக்கலாம். மேலும், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து