முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளனர்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

சென்னை, மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதல்வர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி தமிழ்நாடு. தீவிரவாதத்திற்கு எப்போது முதலமைச்சர் துணை போக மாட்டார். தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் சிலர் விஷம கருத்துக்களை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழ்நாடு இடம் தராது.

இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதர சகோதரிகளாக உள்ளனர். மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைக்கிறார். ஆனால் அவருக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் தமிழ்நாட்டில் நடக்காது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து