முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூரில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      தமிழகம்
Boot

Source: provided

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோயிலில் தற்போது சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் உள்ள மடம் ஒன்றில் உள்ள வேத பாடசாலை மாணவர்களான ஹரிஹரன்(16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய 3 பேர் வேத பாராயணம் படித்து வந்தனர்.

இந்நிலையில், ஹரிஹரன், வெங்கட்ராமன், வீரராகவன் ஆகிய 3 பேரும் நேற்று (மே 6) காலை வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தின் படிக்கட்டுகளில் நீரில் நின்றவாறு சந்தியா வதனம் செய்து கொண்டிருந்தனர். இதில் ஒரு மாணவர், தெப்பக் குளத்தினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட மற்ற இரு மாணவர்கள், நீரில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற குளத்தில் குதித்தபோது, அவர்களும் நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து குளத்தில் மூழ்கிய வேதபாட சாலை மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு, 3 மாணவர்களை சடலங்களாக மீட்டனர். தொடர்ந்து, திருவள்ளூர் டவுன் போலீஸார், 3 மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து