முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி ரசிகர்கள் கோமாளிகள்: வைரலாகும் பாடகர் கருத்து

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      விளையாட்டு
Veert-Coli-Dhoni 2025-03-24

Source: provided

 மும்பை : ஹிந்தி பாடகர் விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து கூறியது பாடகர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடிவரும் கோலி அவ்வபோது சமூக வலைதளங்களிலும் எதாவது விளம்பரங்களுக்காகப் பதிவிடுவார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின்  பேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தது சர்ச்சையானது. இதுகுறித்து கோலி, “இது அல்காரிதம் தவறினால் ஏற்பட்டது. நான் லைக் செய்யவில்லை” எனக் கூறியது கிண்டலுக்கு உள்ளானது.

கோலியும் அவரது ரசிகர்களும்...

இந்த நிகழ்வின் போது ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா (37) தனது இன்ஸ்டா பக்கத்தில், ”பெண்களே உங்களது படங்களுக்கு நான் லைக் செய்வதில்லை. அல்காரிதம் செய்திருக்கலாம்” எனக் கிண்டலாக பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவினால் விராட் கோலி தன்னை இன்ஸ்டாவில் பிளாக் செய்ததாகவும் அதுவும் இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் தவறினால் ஏற்பட்டிருக்கலாம் என சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் ராகுலை அவமானப்படுத்த தொடங்கினார்கள். அவரை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக கமெண்டுகளில் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து ராகுல் வைத்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது: 

கோலி குறித்து,,, 

விராட் கோலி ரசிகர்கள் அவரைவிட மிகப்பெரிய கோமாளிகள். என்னைக் குறித்து அவதூறு பேசுங்கள் அது பொருத்துக் கொள்ளலாம். ஆனால், எனது மனைவி, சகோதரிகளை ஆபாசமாகப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. எனது குடும்பத்தினரைக் குறித்து பேசுவதற்கு தனிப்பட்ட நபர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால்தான் சொல்கிறேன் விராட் கோலி ரசிகர்கள் கோமாளிகள்! (மதிப்பே இல்லாத) கோமாளிகள்! கிரிக்கெட்டராக கோலியைப் பிடிக்கும். ஆனால், மனிதராக கோலியை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இது முதல்முறையல்ல..!

இதற்கு முன்பாக கோலியை ஆட்டமிழக்க செய்த பிலிப்ஸுக்குப் பதிலாக பிலிப்ஸ் எலக்ட்ரானிக் நிறுவனத்தையும் கிரிக்கெட்டர் அர்ஷத் கானுக்குப் பதிலாக நடிகர் அர்ஷத் கானை திட்டியதும் குறிப்பிடத்தக்கது.  ஐ.பி.எல். தொடரில் இந்தாண்டு ஆர்.சி.பி. அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து