முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      விளையாட்டு
West-Indies 2024-05-27

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து (3 ஒருநாள் மற்றும் 3 டி20) மற்றும் இங்கிலாந்துக்கு (3 ஒருநாள் மற்றும் 3 டி20) சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி (ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு மட்டும்) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜுவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கோ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி. ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட். 

__________________________________________________________________________________

மீண்டும் சுரேஷ் ரெய்னா..?

தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் போட்டிகளின் இடையே சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசிய ரெய்னாவிடம் மீண்டும் ஐ.பி.எல். வாய்ப்பு கிடைத்தால் எந்த அணிக்காக ஆட ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினால் நானும் ரோகித்தும் இணைந்து விளையாடுவோம். அப்படி அவருடன் வான்கடேவில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்றார். இதன் காரணமாக சி.எஸ்.கே அணிக்கு அடுத்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாட ஆசைப்படுவது தெரிய வந்துள்ளது.

__________________________________________________________________________________

வீரருக்கு கொலை மிரட்டல்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷமி தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகினார்.அதன்பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்த ஷமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடினார். தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில், முகமது ஷமியிடம் ரூ. 1 கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

__________________________________________________________________________________

மும்பை இந்தியன்ஸ் வீரர் கைது

சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடல்ரீதியான உறவில் ஈடுபட்ட சிவாலிக் சர்மா, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவரது காதலி புகார் கொடுத்திருந்தார். சிவாலிக் சர்மாவின் காதலி கொடுத்த புகாரின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து