முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. சார்பில் சிராஜுக்கு வைர மோதிரம் அணிவித்த ரோகித் சர்மா

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பி.சி.சி.ஐ. சார்பில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற்ற டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வென்ற அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு நாமன் விருதுகளில் வைர மோதிரம் பி.சி.சி.ஐ. சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது.

முகமது சிராஜுக்கு தனது டி20 உலகக் கோப்பையில், இந்தியா விளையாடிய முதல் சில ஆட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். பரிசளிப்பு நிகழ்வின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கலந்துகொள்ளவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பையின் ரோகித் சர்மா மற்றும் குஜராத் வீரர் முகமது சிராஜ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அணிவித்தார்.

இந்த சீசனில் சிராஜ் மற்றும் ரோகித் இருவரும் தங்கள் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போனது.

இருப்பினும், ஐபிஎல்லில் சிராஜ் இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து