முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
CBI 2023 04 19

Source: provided

சென்னை : சி.பி.ஐ. இயக்குநர் பிரவீண் சூட் பதவிக்கால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குநராக உள்ள பிரவீண் சூட், வரும் மே 25-ம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1986, கர்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், 2023, மே 25-ஆம் தேதி சி.பி.ஐ. இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக கர்நாடக காவல் துறை தலைவராக (டிஜிபி) அவர் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து