முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல். போட்டிகள்: பாக். வேண்டுகோளை நிராகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு?

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      விளையாட்டு
West-Indies 2024-05-27

Source: provided

துபாய் :  எஞ்சிய பி.எஸ்.எல். போட்டிகளை  நடத்த பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை நிராகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். ஒத்திவைப்பு...

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வந்தது. அதேபோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில்.... 

அதேவேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுகோளை யு.ஏ.இ. நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் ஐ.பி.எல்...

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போர்டுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்தியாவில் நடைபெறக் கூடிய போட்டிகளுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது.  அதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரும் அங்கு நடத்தப்பட்டுள்ளது. 

நிராகரிக்க முடிவு...?

இந்த வருடம் தொடக்கத்தில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் எமிட்ரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முன்னிட்டு பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்டு நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து