முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையை நோக்கி படையை நகர்த்திய பாக். ராணுவம்: வியோமிகா

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Viamiga-Singh--Wing-Command

புதுடெல்லி, இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று  (மே 10) நடைபெற்றது. இதில்,  வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

விமானப் படையின் பதில் நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி தனது துருப்புக்களை நகர்த்தி வருகிறது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கம் கொண்ட தாக்குதலை குறிக்கிறது. இந்திய ஆயுதப்படைகள் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளன. அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு, விகிதாச்சார ரீதியாக பதிலளிக்கப் பட்டுள்ளன.

பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் அதேநேரத்தில், பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் வலியுறுத்தின.  பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளது. இந்தியாவின் S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத்கர் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் அது கூறுகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது என தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படை தளங்கள் இந்தியத் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து