முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் 3 வகை அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளர் நியமனம்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

கேப் டவுன் : தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.

ஒரே பயிற்சியாளர்...

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐ.சி.சி. உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் பயிற்சியாளராகத் தொடர்வார் என சி.எஸ்.ஏ. (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) தெரிவித்துள்ளது.

டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு... 

சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக 2023ஆம் ஆண்டு பயிற்சியாளராக தேர்வானார். இவரது தலைமையில் தெ.ஆ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி மோதவிருக்கிறது. 58 வயதாகும் சுக்ரி கான்ராட் தனது முதல் வெள்ளைப் பந்து பயிற்சியாளராக தெ.ஆ. அணிக்காக வரும் ஜூலையில் ஜிம்பாப்வே உடன் பொறுப்பேற்கிறார்.

இந்தியாவுடன் தோல்வி...

டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதாகவும் வெள்ளைப் பந்தில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவருவார் என ஆர்வமாக இருப்பதாகவும் சி.எஸ்.ஏ.வின் இயக்குநர் கூறியுள்ளார். கடைசியாக டி20 உலகக் கோப்பையில் தெ.ஆ. அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து