முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் சுபான்ஷு..!

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Nasa-2024-10-15

Source: provided

புதுடில்லி: விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக சுபான்ஷு சுக்லா  என்ற இந்தியர் ஒருவர் செல்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு, மிஷன் - 4 (ஏஎக்ஸ் - 4) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ப்ளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து விண்வெளி செல்லும் விண்கலன் மூலம் வரும் மே 29 ஆம் தேதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில முக்கிய காரணங்களால் ஜூன் 8 ஆம் தேதிக்கு இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் பணிக்கு ஷுக்லா, மிஷன் பைலட் ஆக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன், அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலாந்தைச் சேர்ந்த ஸ்லாவொஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னியூஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் காபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கின்றனர்.

முன்னதாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நாசா மற்றும் இஸ்ரோ இடையிலான கூட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் ஏஎக்ஸ் - 4 மிஷனுக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பயணத்தின் மூலம், இந்தக் குழுவினர் விண்வெளியில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து