முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொலை

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
Murder 2023-07-06

Source: provided

நீலகிரி : நீலகிரியில் 6 சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் முகமது மற்றும் மைமுனா தம்பதிகள். இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் முகமது அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகையை முடித்துவிட்டு 1 மணிக்கு மேல் வேலைக்கு சென்றார். பின்னர் இவர் தனது மனைவிக்கு போன் செய்தார். மைமுனா போனை எடுக்காத நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மைமுனா முகம், கை, காலகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை ஆய்வு செய்த போலீசார் பெண்ணின் 6 சவரன் நகைகள் திருடு போனதை கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 சவரன் நகைக்காக பெண் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து