முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து சுற்றுப்பயணம் இந்திய இளம் அணிக்கு சவால் : முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணிப்பு

திங்கட்கிழமை, 26 மே 2025      விளையாட்டு
Harbhajan-Singh 2023-10-21

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப் போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 இங்கி. சுற்றுப்பயணம்...

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கியமான தொடர்...

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக மிக முக்கியமான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மிகவும் கடினம்...

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான முடிவு. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது. ஷுப்மன் கில், ரிஷப் பந்த் தலைமையிலான இளம் இந்திய அணி நன்றாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

மிகப் பெரிய வெற்றிடம்... 

அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாததால் திடீரென மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ஷுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையிலான அணியை உடனடியாக மதிப்பிடுவது நியாயமானதாக இருக்காது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமையாவிட்டாலும், அணியை உடனடியாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து