Idhayam Matrimony

வேம்பு விமர்சனம்

புதன்கிழமை, 28 மே 2025      சினிமா
Vembu-Review 2025-05-28

Source: provided

கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா , மாரிமுத்து, , ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ’வேம்பு’

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வாழும் நாயகன் ஹரிகிருஷ்ணன் புகைப்பட கலைஞராக ஸ்டுடியோ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மாமன் மகள் நாயகி ஷீலா சிலம்பம் மீது ஆர்வம் கொண்ட ஷீலா அதை நன்கு கற்றுக் கொள்கிறார். சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கும் , ஷீலாவிற்கு திருமணம் நடக்கிறது. இந்நிலையில் விபத்து ஒன்றில் ஹரிகிருஷ்ணனுக்கு கண் பார்வை பறிபோகிறது. இதனால் ஷீலா குடும்ப பொறுப்பை ஏற்கிறார் . இறுதியில் நாயகி ஷீலா சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்தாரா? 

விபத்தினால் ஹரிகிருஷ்ணனுக்கு பறி போன கண் பார்வை மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’வேம்பு’. புகைப்பட கலைஞராக நடித்திருக்கும் நாயகன் ஹரிகிருஷ்ணன் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் நாயகி ஷீலா துணிச்சலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிலம்பம் சுற்றுவது, கற்று கொடுப்பது ,கண் பார்வையற்ற கணவனை பாசமாக பார்த்து கொள்வது என கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் .

அம்மாவாக வரும் ஜானகி , எம்.எல்.ஏவாக வரும் மாரிமுத்து, என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

தற்காப்புக் கலையுடன் சேர்ந்து பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு.

இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து