முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி

புதன்கிழமை, 28 மே 2025      இந்தியா
Modi

புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், "இந்தியத் தாயின் உண்மையான மகன்" என்றும், வெல்ல முடியாத துணிச்சலின் சின்னம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கடுமையான துன்பங்களை எதிர்கொண்டபோதும் வீரர் வீர சாவர்க்கரின் அசைக்க முடியாத மனப்பான்மையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. இந்தியத் தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட மிகக் கடுமையான பல கொடுமைகள் கூட தாய்நாட்டின் மீதான அவரது பக்தியை அசைக்க முடியவில்லை. சுதந்திர இயக்கத்தில் அவரது அடங்காத துணிச்சல் மற்றும் போராட்டத்தின் வரலாறை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது தியாகமும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து