எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை டிச.24 அன்று கைது செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த டிச.28 அன்று உத்தரவிட்டது. இந்நிலையில் ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜன.5 அன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கடந்த பிப்.24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 7-ம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீஸார் சுமத்தியுள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.
அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்.23 அன்று சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் கடந்த மே 20 முதல் மே 23 வரை இரு தரப்பிலும் 3 நாட்களில் தங்களது இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளதாகவும் அறிவியல் ரீதியான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியதுடன் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28-ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், தண்டனை விவரம் குறித்து ஞானசேகரனிடம் நீதிபதி கேட்டபோது, தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதாலும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அரசுத் தரப்பில் ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
5 மாதத்தில் தீர்ப்பு
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் 5 மாதத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரனுக்கு எதிராக மொத்தம் 35 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அதில் பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு எதிராக தற்போது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2025
29 May 2025 -
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை
29 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
29 May 2025சென்னை, கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது.
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்
29 May 2025சென்னை, சென்னையில் பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் நேற்று காலமானார்.
-
5 ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொட இருக்கும் வெப்பநிலை
29 May 2025வாஷிங்டன், 5 ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நார்வே: கேப்டன் தூங்கியதால் வீட்டிற்குள் புகுந்த சரக்கு கப்பல்
29 May 2025ஓஸ்லோ, நார்வேயில் உள்ள கடலோர பண்ணை வீட்டிற்குள் கப்பல் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம்
29 May 2025புதுடெல்லி, கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
கனமழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் 2 நாள் மூடல்
29 May 2025நீலகிரி, ஊட்டியில் 2 நாட்கள் கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
-
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
29 May 2025சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
வாசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்: நடிகர் ராஜேஷுக்கு கமல்ஹாசன் புகழாரம்
29 May 2025சென்னை, வாசிப்பதையும், சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் நடிகர் ராஜேஷ் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 கைது
29 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அதிகார வரம்பை மீறுகிறீர்கள்: அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
29 May 2025நியூயார்க், டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட
-
மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
29 May 2025மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி த.வெ.க. தலைவர் விஜய் கவுரவிக்கிறார்.
-
எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிறுமி: துணை முதல்வர் நேரில் பாராட்டு
29 May 2025சென்னை, எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில்
-
உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
29 May 2025சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
-
ராஜேஷ் அருமையான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
29 May 2025சென்னை, எனது நண்பர் ராஜேஷ் அருமையான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி
29 May 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடியை அளித்துள்ளது.
-
சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரம்; பேரிடராக அறிவித்தது கேரள அரசு
29 May 2025கொச்சி, சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரத்தை பேரிடராக கேரள அரசுஅறிவித்துள்ளது.
-
130 நாட்கள் பணிக்காலம் நிறைவு: அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
29 May 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
நகராட்சி நிருவாகம்-குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு மேலும் நெருக்கடி
29 May 2025டாக்கா, வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமெரிக்கா அரசு துறையில் இருந்து எலான் மஸ்க் 'திடீர்' விலகல்: டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு
29 May 2025வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.