முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன பாதுகாப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

புதன்கிழமை, 28 மே 2025      உலகம்
Trump 2023 03 05

வாஷிங்டன், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அற்புதமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் ஓர் அங்கமாக விரும்பும் கனடாவிடம், ஒரு தனித்த சுதந்திர தேசமாக சேர விரும்பினால் 61 பில்லியன் டாலர் அதற்காக செலவாகும். ஆனால், அவர்கள் எங்களின் நேசத்துக்குரிய 51-வது மாநிலமாக மாறினால் ஒரு டாலர் கூட செலவாகாது என்று நான் தெரிவித்தேன். அவர்கள் சலுகையை பரிசீலனை செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார். 

தனது தேர்தல் வெற்றிக்கு பின்பு கனடா பிரதமர் மார்க் கார்னி, மே மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாட்டுத் தலைவர்களும் கோல்டன் டோம் திட்டம் பற்றிப் பேசினார்.

கடந்த வாரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “இது கனடாவுக்கு சிறந்த யோசனையா? ஆமாம், கனடா மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லதுதான். என்றாலும், கனடா விற்பனைக்கு இல்லை. ஒருபோதும் விற்பனைக்கு கிடைக்காது.” என்று தெரிவித்திருந்தார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்கா - கனடா இடையேயான உறவுகள் கடினமாகி வருகின்றன. அவரின் கூடுதல் வரி எச்சரிக்கை, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த அழுத்தம் போன்றவை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை மோசமடையச் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து