முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் பாக்.கின் 72 ராணுவ நிலைகள் அழிப்பு: இந்திய எல்லை பாதுகாப்புப்படை தகவல்

புதன்கிழமை, 28 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

பஹல்காம் : பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாக இந்தியா எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியாவின் முப்படைகள் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தாக்குதல் நடத்தின. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.

இதுகுறித்து ஜம்மு பிராந்திய பி.எஸ்.எப். ஐ.ஜி. சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பி.எஸ்.எப். வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும். தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம்.

இந்த துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாக தகர்க்கப்பட்டன. மறைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பெயரை, எல்லையில் உள்ள இரண்டு நிலைகளுக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து