முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கம்

புதன்கிழமை, 28 மே 2025      இந்தியா
BJP 2023 04 10

பெங்களூரு, கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது.

இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. எஸ்.டி. சோமசேகரும் பா.ஜ.க. மாநில தலைமையுடன் மோதலில் ஈடுபட்டார். கர்நாடக பா.ஜ.க. எடியூரப்பாவின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது என அவர் விமர்சித்தார். இதனால் மாநில தலைவர் விஜயேந்திரா, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க. மேலிடத்துக்கு புகார் அளித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க.வின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயலாளர் ஓம் பதாக் கூறும்போது, ''கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்'' என அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் இந்த முடிவுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் விரைவில் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து